Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சிறப்பு கத்திச்சண்டை பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

In
Published: 15:31 GMT, Apr 21, 2017 |
0 Comments
1034
images

ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோருடன் ஸ்ருதி ஹசன் இனைந்து நடிக்கும் சங்கமித்ரா எனும்  திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகின்றார்.

சரித்திர பின்னணியிலான படமாக இது உருவாகிறது. இதற்காக ஸ்ருதிஹாசன் கத்தி சண்டை பயிற்சி பெற வேண்டும் என இயக்குனர் கூறியிருந்தார்.

அதனைத் தொடந்து லண்டன் புறப்பட்டு சென்றார் ஸ்ருதி. அங்கு பிரத்யேகமாக கத்தி சண்டை பயிற்சி பெறுகிறார். பட தரப்பில் இதுபற்றி கூறும்போது. சங்கமித்ரா பாத்திரம் ஏற்கிறார் ஸ்ருதி. கத்தி சண்டை போடுவதில் திறமையான கதாபாத்திரமாக இது சித்தரிக்கப்படுகிறது இதனால் ஸ்ருதி கத்தி சண்டை பயிற்சி பெற சம்மதித்தார். என தெரிவிக்கப்படுகின்றது.

 லண்டனில் உள்ள கத்தி சண்டை சிறப்பு பயிற்சியாளரிடம் பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அவரிடம் கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதி. கத்தி சண்டைக்கான நுணுக்கங்களில் அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது’ என்றனர். ஸ்ருதி கத்தி சண்டை பயிற்சி வீடியோவும் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)