Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 15:50 GMT, Apr 21, 2017 |
0 Comments
1023
paris

பரிஸ் சாம்ஸ் எலிசே வீதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்துறை உறுப்பினரின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ. எஸ் ஆயுததாரியால் சுட்டுக்கொல்லப்பட்டவர் 37 வயதான சேவியர் யுஜெலே எனவும் இவர் பிரான்சின் சீ ஆர் எஸ் காவற்துறையின் 32 ஆம் பிரிவில் பணியாற்றியவர் எனவும் பிரெஞ்சுஉள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பலியான சேவியர் யுஜெலேக்கு ஏனைய காவற்துறை உறுப்பினர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

காவற்துறையின் பதில் தாக்குதலி;ல் சுட்டுக்கொல்லப்பட்ட ஆயுததாரி 39 வயதான கரீம் ஸேயூர்பி என அடையாளங் காணப்பட்டுள்ளது

இவர் கடந்த 2005 பெப்ரவரியில் மோசமான கடும் குற்றச் செயல்களுக்காக 15 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார்

870x489_maxnewsworldfour255483

பிரான்சின் அரச தலைவர் தேர்தலின் முதல்சுற்று வாக்குப்பதிவு நாளை மறுதினம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இன்று நள்ளிரவுடன் முதல் சுற்று வாக்களிப்பின் தேர்தல் பரப்புரைகள் ஓய்வுக்கு வருகின்றன.

முதல் சுற்றில் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த வாக்குப்பதிவில முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்களே  அடுத்து இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் போட்டியிடவுள்ளனர்

_95737537_asange-sessions

விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சை கைது செய்வதே அமெரி;க்காவின் முன்னுரிமை தெரிவு என அமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செசன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் கடந்த 5 வருடங்களாக யூலியன் அசாஞ் தஞ்சம் பெற்றுவருகின்றார்.

அமெரிக்கா குறித்த பல ரகசியத்தகவல்கள் விக்கிலீக்ஸ் ஊடாக கசிந்ததால் அவர்மீது அமெரிக்கா கடும் சீற்றத்தில் உள்ளது

_95736147_mayberkshirenew

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கென்சவேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதிஉதவி குறைக்கப்படுமென வெளிவந்த தகவல்களை பிரித்தானிய தலைமையமைச்சர் திரேசாமே இன்று மறுத்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் தேசியவருமானத்தில் 0.7 வீதம்  அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு நிதிஉதவியாக வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

பிரித்தானியா வழங்கும் நிதிஉதவியை அதிகமாக பெறும்நாடுகளின்பட்டியலில்  2015 இல் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது

truckjpg

இந்தியாவின் ஆந்திரமாநிலத்தில் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி,காவல் நிலையத்தின் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது கனரன  மோதியதில்; 20 பேர் பலியாகி மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருப்பதியின் ஏர்பேடுகிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கூட்டத்துக்குள் மிகவேகமாக சென்ற வாகனம் அதன்பின்னர் அருகிலிருந்த கடைக்குள்ளும் புகுந்ததால் அங்கிருந்த 6 பேரும் பலியாகினர்.

விபத்தில் சிக்கிய மக்களை மீட்கச்சென்ற சிலரும் மின்சாரதாக்குதலுக்கு உள்ளாகி பலியாகினர்.

காயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)