Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ப.பாண்டி கதை தொடர வேண்டும்: கௌதம் மேனன் வேண்டுகோள்

In
Published: 16:04 GMT, Apr 21, 2017 |
0 Comments
1097
This post was written by : Vithushagan
aFNipK90dhanush_gautham001

‘ப.பாண்டி’ கதை இன்னும் தொடர வேண்டும் என்று இயக்குநர் தனுஷுக்கு கௌதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்குனராக கால் பதித்த முதல் படமான பா.பாண்டி அவருக்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையுலக பிரபலங்களும் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பும் பாராட்டுக்களும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

படத்தின் விமர்சனமும், பாக்ஸ் ஆபிஸிலும் களக்கி வரும் நிலையில் விரைவில் இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர கூடிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பா.பாண்டி படத்தை பார்த்து, ‘பா.பாண்டி, பூதென்றலுக்கு அடுத்து என்ன ஆனது என்று தெரிய ஆர்வமாக இருக்கிறது. கதையை மேலும் கொண்டு போங்கள்’ என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் தனுஷ்க்கு ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner