Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன் என்கிறார் பூனம் பாஜ்வா

In
Published: 17:07 GMT, Apr 21, 2017 |
0 Comments
1033
201704211608512946_poonam1-X._L_styvpf

சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்

‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’ ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பாஜ்வா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், திறமை இருந்தும் இவரால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2′ சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார்.

தற்போது பூனம் பாஜ்வா ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பூனம் பாஜ்வாவுக்கு அழுத்தமான நாயகி வேடமாம். இப்படத்தில் புடவை கட்டி குடும்ப பெண்ணாகவும் நடிக்கிறாராம். இதன்மூலம் தனக்கு நல்ல நடிகை என்ற பெயர் வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். தன்னை தேடிவந்த சில கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)