Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறும் மேற்கிந்திய தீவுகள்

In கிாிக்கட்
Updated: 04:10 GMT, Apr 22, 2017 | Published: 04:08 GMT, Apr 22, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Anojkiyan
paak

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்களை பெற்றுள்;ளது.

ஆட்டநேர முடிவில் ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்களுடனும், பிஸ்சோ 23 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சேஸ் மற்றும் டவுரிச் ஆகியோரின் அரைசத துணையுடன் 81 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்களை பெற்றது. பந்து வீச்சில் மொஹமட் ஆமிர் 3 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg