Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருப்பதியில் விபத்து: 14 பேர் உயிரிழப்பு

In இந்தியா
Published: 04:12 GMT, Apr 22, 2017 |
0 Comments
1916
This post was written by : Surenth
Thirupathi Accident

பொலிஸில் முறைப்பாடு வழங்க சென்றவர்கள் மீது லொறி மோதியதால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏர்பேடு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த சமபவம் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் சட்டவிரோதமாக சிலர் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மண்டல வருவாய் அதிகாரியிடம் மனு வழங்க சித்தூர் மாவட்டம் மோனஹளபாளையம் கிராமத்தை சேர்ந்த 50இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பதி அருகே உள்ள ஏர்பேடுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, மண்டல வருவாய் அதிகாரி காரியாலயத்தில் இல்லாததன் காரணமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், ஏர்பேடுபொலிஸ் நிலையத்துக்கு திருப்பதி நகர பொலிஸ் அத்தியட்சகர் ஜெயலட்சுமி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த மக்கள் ஏர்பேடு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பொலிஸ் அத்தியட்சகர் ஜெயலட்சுமி வருகை தராததன் காரணமாக மக்கள் வெளியில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதியில் இருந்து காளஹஸ்திக்கு சென்றுகொண்டிருந்த கனரக லொறி ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பின்னர், அந்த லொறி வேகமாக வந்து ஏர்பேடு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதன்காரணமாக, கூடியிருந்த மக்கள் கூடத்தில் இருந்த சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg