Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பெருநிறுவனங்கள் தொடர்பான மூன்று நிறைவேற்று ஆணைப்பத்திரங்களில் கைச்சாத்திட்டார் ட்ரம்ப்

In
Published: 04:33 GMT, Apr 22, 2017 |
0 Comments
1289
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் தலைமையகத்தை வெளிநாடுகளுக்கு நகர்த்துவதை தவிர்க்கும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை மாற்றியமைக்கும் வகையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று நிறைவேற்று ஆணைப் பத்திரங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கை அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

ஒபாமாவினால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை மீளாய்வு செய்யுமாறு அண்மையில் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்தே மேற்குறித்த நிறைவேற்று ஆணைப் பத்திரங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அமெரிக்க நிறுவனங்களுக்கான வரி ஊக்கத்தொகை மற்றும் வெளிநாட்டு தொழில்கள் என்பவற்றை கட்டுப்படுத்த வரி சீர்திருத்தம் உதவி புரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg