Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெப்பநிலை காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை

In இந்தியா
Updated: 08:35 GMT, Apr 22, 2017 | Published: 04:40 GMT, Apr 22, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Surenth
TamilNadu Hot Climet

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இது குறித்த ஆய்வு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றதாக தமிழக அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு கோடைக்கால சிறப்பு விடுமுறை கடந்த 21ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்புக்களோ தனியார் வகுப்புக்களோ நடத்த முடியாது எனவும் உயர் கல்வி நிறுவனங்களில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவத்துறை சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பிலும் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான மருந்து பொருட்களை வைத்திருப்பது தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் பந்தல் மற்றும் நிழல் பந்தல்களை அமைப்பது தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg