Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொதுமக்கள் மற்றும் போராளிகளை வெளியேற்றி வந்த நடவடிக்கை நிறைவு!

In உலகம்
Published: 04:57 GMT, Apr 22, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Sylviya

சிரிய அரச படைகளின் முற்றுகைக்குட்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் போராளிகளை வெளியேற்றி வந்த நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இன்று (சனிக்கிழமை) வெளியாகிய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை சுமார் 48 மணித்தியாலங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்ததன் பின்னரே நேற்று (வெள்ளிக்கிழமை) நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிரிய அரசாங்கத்தின் பிடியில் இருந்த சுமார் 500 போராளிகளை விடுவிக்குமாறு போராளிகள் மற்றும் சிரிய அரசாங்கம் ஆகியனவற்றுக்கிடையில் நேற்று உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது 500 போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 250 போராளிகள் இனிவரும் நாட்களில் விடுதலை செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட குறித்த போராளிகள், வாகனத் தொடரணியின் மூலம் அல் – ரஷிடீன் (al-Rashideen) எனும் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த நகரம், சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் அமைந்துள்ளது.

அத்துடன், முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்த பொதுமக்கள் மற்றும் அரச சார்புப் போராளிகள் ஆகியோர் கெஃபராயா (Kefraya) மற்றும் அல்பியுவா (al-Foua) ஆகிய நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg