Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈ.பி.எஸ். அணியுடன் பேச்சு நடத்த ஓ.பி.எஸ். அணி தயார்

In இந்தியா
Updated: 05:02 GMT, Apr 22, 2017 | Published: 05:01 GMT, Apr 22, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Surenth
EPS With OPS

அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் வீதி பகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கே.பி.முனுசாமி தலைமையில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், மைத்ரேயன் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்றும் பேச்சுவார்த்தைக்கு முன்பு நிபந்தனைகளை வெளியிட முடியாது எனவும் விரைவில் நல்லது நடக்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மிகத் தெளிவாக மூன்று நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும் எனவும் பன்னீர்செல்வம் அணியின் மா.பாண்டியராஜன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

OPS Team

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg