Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எயார் இந்தியாவில் கட்டண சலுகைக்கான மூத்த குடிமக்களின் வயதெல்லை குறைப்பு!

In இந்தியா
Updated: 09:00 GMT, Apr 22, 2017 | Published: 05:25 GMT, Apr 22, 2017 |
0 Comments
1261
This post was written by : Surenth

எயார் இந்தியா விமானத்தில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைக்கான வயதெல்லையை குறைத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, 63 ஆக இருந்த வயதெல்லை தற்போது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எயார் இந்தியா விமானத்தில் உள்நாட்டு சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற்றுக்கொள்ள, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீடு, ஓட்டுனர் உரிமம், எயார் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டை ஒன்றை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg