Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எங்களின் வெற்றிப்பயணம் தொடரும்: ரோஹித் நம்பிக்கை

In கிாிக்கட்
Updated: 05:30 GMT, Apr 22, 2017 | Published: 05:30 GMT, Apr 22, 2017 |
0 Comments
1520
This post was written by : Anojkiyan

தங்களின் வெற்றிப்பயணம் தொடரும் என ஐ.பி.எல் ரிருவென்ரி கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் இருமுறை மகுடம் சூடிய மும்பை அணி, நடப்பு தொடரிலும் சிறப்பாக விளையாடிவருகின்றது. அத்தோடு புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

பிளே ஓஃப் சுற்றுக்கு தெரிவாக வேண்டுமாயின் இன்னும் ஒரிரு போட்டிகளில் வெற்றியை ருசிக்க வேண்டுமென்ற நிலையில் உள்ள மும்பை அணி, இனிவரும் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்யுமென என சர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது வரை தொடரின் முதல் கட்டம் முடிந்து இருக்கிறது. அடுத்து வரும் 2வது கட்டம் முக்கியமானது. இதனால் உத்வேகத்தை கைவிட்டு விடகூடாது. தொடர் வெற்றியை தக்க வைப்போம் என நம்புகிறோம்” என கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (சனிக்கிழமை) டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg