Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இராமேஸ்வரம் மீனவர் கொலை: தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு

In இந்தியா
Published: 06:14 GMT, Apr 22, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Surenth
fish.

தமிழகம், இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இராமேசுவரம் பகுதி, தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த மாதம் 6ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து, தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ புதுவையில் ஊடகவியலாளர்களிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்வது சர்வதேச மனித உரிமை எனவும் அவ்வாறு மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவரை சுட்டுக் கொலை செய்வது மனித உரிமை மீறலாகும் எனவும் குற்றம் சுமத்தி இருந்தார்.

எனவே, மீனவர் பிரிட்ஜோவின் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மனித உரிமை மீறல் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தண்டிக்குமாறும் இறந்த மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு உரிய நீதியும், நிவாரணமும் கிடைக்க உத்தரவிடுமாறும் தேசிய மீனவர் பேரவை சார்பில், மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக இளங்கோ மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg