Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின் விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன!

In உலகம்
Published: 06:09 GMT, Apr 22, 2017 |
0 Comments
1315
This post was written by : Sylviya

சிரியாவின் இட்லிப் நகரில் நடத்தப்பட்ட நச்சுவாயுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிரியாவுக்கான ஐ.நாவின் தலைமை புலன்விசாரணையாளர் பௌலோ செர்கியோ (Paulo Sergio), நச்சுவாயுத் தாக்குதல் நடைபெற்ற தினத்தன்று தொடர் விமானத் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) நியூயோர்க் நகரில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இம்மாதம் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட நச்சுவாயுத் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே சமயம் தொடர் விமானத் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நச்சுவாயுத் தாக்குதல் நடைபெற்று மேலும் சில மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஒரு முறை விமானத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நச்சுவாயுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விட விமானத் தாக்குதலால் உயிரிழந்தவர்களே அதிகம்” எனத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடத்தப்பட்ட குறித்த நச்சுவாயுத் தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலை சிரிய அரச படையினரே மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுவதால் பல உலக நாடுகள் சிரியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விசாரணைகளின் போது தெரியவந்த விமானத் தாக்குதல் தொடர்பிலும் குறித்த நச்சுவாயுத் தாக்குதலுக்கும் சிரிய அரசுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg