Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சம்பியன்ஸ் தொடரில் ராகுல் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு

In கிாிக்கட்
Updated: 07:37 GMT, Apr 22, 2017 | Published: 06:50 GMT, Apr 22, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Anojkiyan
kl

இந்தியக் கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் வீரரான லோகேஷ் ராகுல், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என கூறியுள்ளார்.

கடந்த அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது, தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, ராகுல் இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த காயம் குணமடைய இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ராகுலை, இந்த தொடரில் இந்திய அணி இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில், ”சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. காயம் குணமடைய இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். ஆனால், ஒவ்வொருவருடைய உடல்நிலைக்கு ஏற்ப அது மாறுபடும். இதனால் உடல்நிலை எப்படி குணமடைகின்றது என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

தற்போது இரண்டு மூன்று வாரங்களாக ஓய்வு எடுத்து வருகிறேன். எந்த வேலையும் செய்யவில்லை. அதன்பிறகு பிசியோதெரபி மற்றும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதற்கான வேலையை தொடங்குவேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg