Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஊழல் எங்கு நடந்தாலும் தி.மு.க. விரைந்து செயற்படும்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 06:34 GMT, Apr 22, 2017 | Published: 06:29 GMT, Apr 22, 2017 |
1 Comment
1182
icon_com
This post was written by : Surenth
Mk Stalin Deputy Chief Minister of Tamil Nadu from 2009 to 2011

தமிழகத்தில் உள்ள எல்லாத்துறைகளிலும் தற்போது ஊழல் கொடி கட்டி பறப்பதாகவும் எங்கு ஊழல் நடந்தாலும் அதை வெளிப்படுத்த தி.மு.க. விரைந்து செயற்படும் எனவும் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி – கஸ்தூரி தம்பதியரின் ‘முத்து விழா’ சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இடம்பெறும் ஊழல்களை வெளிக்கொண்டுவர தி.மு.க.வின் உணர்வாளர்கள் தீவிரமாக செயற்பட வேண்டும் எனவும் ஏதாவது தகவல் கிடைத்தால் தன்னை சந்தித்து அதனை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய தமிழக அரசியலில் ஊழல் மட்டுமே ஒரே பணி என்று அ.தி.மு.க.வினர் நாற்காலிக்கு சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழக முழுவது பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த 4 வருடத்திற்குள் யாருடன் இணைந்து கொள்ளை அடிப்பது என்பது குறித்தே இந்த அ.தி.மு.க. அரசு செயற்படுவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. V.Pathmanathan srilanka