Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எடப்பாடி பழனிச்சாமி முதலில் விவசாயிகளை சந்திக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

In இந்தியா
Published: 06:48 GMT, Apr 22, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Surenth
G.K.Vasan

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னர் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளின் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் இன்று (சனிக்கிழமை) சந்திக்க உள்ளார். இது குறித்து ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது குறித்தும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுகாற்றுக்குழு அமைப்பது தொடர்பிலும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 37 நாட்களாக போராடிக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் நிம்மதியாக தமிழகம் திரும்ப வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg