Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறிஸ் கெய்லை பாராட்டு மழையில் நனைத்த கம்பீர்

In கிாிக்கட்
Published: 07:32 GMT, Apr 22, 2017 |
0 Comments
1413
This post was written by : Anojkiyan
ChrisGayle_Large

ஆடுகளத்திற்குள் புகுந்துவிட்டால் பந்து வீச்சாளர்களை விழிபிதுங்க வைக்கும் அதிரடி மன்னரான கிறிஸ் கெய்லை, இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான கௌதம் கம்பீர் பாராட்டு மழையில் நனைத்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிவரும் கிறிஸ் கெய்ல், ரி-ருவென்ரி அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற சாதனையை முதல் நபராக அண்மையில் முத்திரை பதித்தார்.

இந்நிலையில் பல இன்னாள் மட்டும் முன்னாள் வீரர்கள் அவரை பாராட்டி வருகின்ற நிலையில், அவர் குறித்து கம்பீரும் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

”சந்தை படுத்துபவர்கள்;, ஒளிபரப்பாளர்கள் மற்றும் எங்களை போன்றோர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு கிறிஸ் கெய்ல் மகிழ்ச்சியளிக்கிறார். ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில் கெய்ல் 10 ஆயிரம் ஓட்டங்களைத் தொட்டது குறித்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடையமாட்டார்கள்.

ஓட்டம் குவிப்பதற்கான சூத்திரமாக 4-3-2-1 என்பதைத்தான் என்னிடம் ஏராளமான பயிற்சியாளர் சொல்வார்கள். நாம் முதலில் நான்கு ஓட்டங்கள், அதன்பின் 3, 2, 1 என தேர்வு செய்வேன். கெய்லோடு இந்த சூத்திரத்தை பார்த்தால், அவர் 6-6-6 என்றுதான் நினைப்பார். அவர் ஒன்று, இரண்டு, மூன்று ஓட்டங்களை வெறுப்பார். ஏராளமானவர்கள் அவருடைய துடுப்பாட்ட மட்டையின் தடிமன் குறித்து பேசுகிறார்கள். ஆனால், எனக்கு அவருடைய போட்டிக்கான திட்டமிடலை நம்புகிறேன்.

அவர் துடுப்பெடுத்தாடினால் விடியற்காலை 2 மணியாக இருந்தாலும், தொலைக்காட்சியின் முன் முதல் நபராக நான்தான் இருப்பேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg