Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி

In இந்தியா
Published: 07:30 GMT, Apr 22, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Surenth
Tamilnadu Farmer

மத்திய கொள்கை குழு கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி விஜயம் குறித்து அவரது அலுவலகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய கொள்கை குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை காலை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி நோக்கி இரவு 8 மணியளவில் சென்றடைவார்.

அவர் நாளை காலை 9.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகை அரங்கில் நடைபெற உள்ள மத்திய கொள்கை குழு கூட்டத்தில் கலந்துகொள்வார்.

குறித்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடும் குறித்த விவசாயிகளின் குறைகளை கேட்டு அதன் பின்னர் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார். என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg