Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துருக்கி கருத்துக்கணிப்பின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு

In உலகம்
Published: 09:47 GMT, Apr 22, 2017 |
0 Comments
1279
icon_com
This post was written by : Sylviya

துருக்கியில் நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவுகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள பிரதான எதிர்க்கட்சி, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளது. குறித்த மேன்முறையீடு நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த கருத்துக்கணிப்பு நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பொதுமக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் செல்லுபடியாகும் வாக்குகள் என்பதை உறுதி செய்யும் வகையில் உயர் தேர்தல் வாரிய அதிகாரிகள் வாக்கு அட்டைகளில் முத்திரையிட்டு வந்ததாகவும், ஆனால் சில வாக்கு அட்டைகளில் கவனக்குறைவின் காரணமாக முத்திரையிட மறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவ்வாறு முத்திரையிடப்படாத வாக்கு அட்டைகள் சட்டவிரோதமானவை என்பது நிரூபிக்கப்படாவிட்டால் அவற்றையும் செல்லுபடியாகும் வாக்குகளாக ஏற்றுக்கொள்வதாக துருக்கியின் உயர் தேர்தல் வாரியம் தெரிவித்திருந்தது.

குறித்த கருத்துக்கணிப்பு தொடர்பான வாக்களிப்பு நிறைவு பெறுவதற்கு சில மணித்தியாலங்கள் இருந்த நிலையிலேயே உயர் தேர்தல் வாரியம் இவ்வாறு அறிவித்திருந்தது.

துருக்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக்கணிப்பின் போது சுமார் 25 மில்லியன் மக்கள் ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் 1.3 மில்லியன் மக்கள் எர்டோகனுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது எனவும் வாக்களித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg