ஓ.பி.எஸ். அணியுடனான பேச்சு சுமூகமாக அமையும்: செங்கோட்டையன்

ஓ.பி.எஸ். அணியுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக அமையும் எனவும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வறட்சி மற்றும் குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதா அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரண்டு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திகதி ஒன்று தீர்மானிக்கப்படும் எனவும் அந்த திகதியில் இரு அணியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வித்துறையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக டொக்டர் இராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது தமிழகத்தில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் விடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.