Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு நோக்கம் கருதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இரத்து

In ஐரோப்பா
Published: 10:51 GMT, Apr 22, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Sylviya

பரிஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா பிலோன் (Francois Fillon) பாதுகாப்பு நோக்கம் கருதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இரத்து செய்தார்.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தாக்குதலைத் தொடர்ந்து நேற்று நடத்தப்படவிருந்த பிரசார நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்டன.

முதல் சுற்று ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு நாளை  நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸில் உள்ள பொதுமக்கள் பதற்றமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையினால் பல பொலிஸார் தொடர்ந்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg