Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

In இலங்கை
Updated: 10:45 GMT, Apr 22, 2017 | Published: 10:25 GMT, Apr 22, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Risha
rajitha

பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பரவும் வகையிலான அசுத்தமான சூழல்கள் பேணப்படின், அப்பாடசாலைகளது அதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த அதிரடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதியில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வாறான நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பயன்படுத்தாதுள்ள மீன்பிடிப் படகுகளில் டெங்கு நுளம்புகள் உருவாவதைத் தடுக்கும் வகையில் அவற்றை அழிப்பதற்கான செயற்பாடொன்றையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட முன்னர் சகல பாடசாலைகளையும் சுத்தம் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும், பெற்றோரின் உதவியுடன் இதனை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg