Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களை பிடித்துக் கொடுத்தால் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு: விஷால்

In சினிமா
Updated: 10:39 GMT, Apr 22, 2017 | Published: 10:39 GMT, Apr 22, 2017 |
0 Comments
1301
This post was written by : Surenth

திருட்டு வி.சி.டி. தயாரிக்க உதவுவோரை பிடித்துக் கொடுத்தால் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

‘விளையாட்டு ஆரம்பம்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம். திரையரங்குகளில் திரைப்படம் காண்பிக்கப்படும் போது அதை கெமரா வைத்து பதிவு செய்து திருட்டு வி.சி.டி. பைரஸி தயாரிக்க வேலை செய்பவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்ய (எப்.ஐ.ஆர்) உதவுகின்றவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு இலட்சம் ரூபாவை பரிசாக வழங்குவோம். இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி. தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும்” என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அருண்பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg