Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பாகுபலி’ திரைப்படம் புதுமையான அனுபவம் என்கிறார் தமன்னா

In சினிமா
Updated: 12:21 GMT, Apr 22, 2017 | Published: 12:20 GMT, Apr 22, 2017 |
0 Comments
1475
This post was written by : Surenth
Bahuli

‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்த பிறகு ஒரு நடிகையாக தன்மீது நம்பிக்கை வந்து விட்டதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி-2’ ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ள அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “எந்த சவாலான காட்சிகளிலும் என்னால் நடிக்க முடியும் என்ற துணிச்சலை இந்த திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு பிறகு எனது தோற்றம் முழுவதும் மாறிவிட்டது.

இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் ஒரு கனவு போல இருக்கிறது. சண்டை காட்சிகளில் நடித்ததை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும், ‘பாகுபலி’யில் நடித்தது என் மனதைவிட்டு நீங்காது.

திரை உலகில் எனக்கு ஒரு வித்தியாசமான பாதையை வகுத்துக்கொடுத்த இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg