Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹரோ நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட சென்ட் ஜோர்ஜ் தினம்

In
Updated: 12:26 GMT, Apr 22, 2017 | Published: 12:12 GMT, Apr 22, 2017 |
0 Comments
1303
icon_com
This post was written by : Risha
harr1

கிறிஸ்தவர்களால் வேத சாட்சியாக வணங்கப்படும் புனிதர்களில் ஒருவரான சென்ட் ஜோர்ஜின் நினைவுநாள் கொண்டாட்டங்கள் இன்று (சனிக்கிழமை) ஹரோ நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சென்ட் ஜோர்ஜ் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி பல்லினத்தவர்களாலும், நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படும்.

அந்தவகையில், ஹரோ நகரில் இன்று குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஹரோ நகர முன்னாள் மேயரும், தற்போதைய கவுன்சிலருமான திரு. சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கவுன்சிலர் சசிகலா சுரேஷ் ஆகியோர் குறித்த நிகழ்வில் முக்கிய அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஹரோ நகர மேயர் ரேகா ஷாவால் குறித்த நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாதமையால், கவுன்சிலர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பல்லினக்க மக்கள் வாழ்கின்ற புனித நகரமான ஹரோ நகரில் இடம்பெற்ற சென்ட் ஜோர்ஜ் தின நிகழ்வில் பல்லின மக்களும் கலந்துக் கொண்டிருந்ததாக அங்கிருக்கும் ஆதவன் செய்தி சேவையின் சிறப்பு நிருபர் தெரிவித்தார்.

harr3

harr7 harr5 harr6

harr2

harr4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg