Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணி உரிமையாளர் ஏன் இதுவரை எம்மை சந்திக்கவில்லை?: பன்னங்கண்டி மக்கள் ஆதங்கம்

In இலங்கை
Published: 12:43 GMT, Apr 22, 2017 |
0 Comments
1308
icon_com
This post was written by : Ravivarman

“ஒரு மாதத்தினைக் கடந்தும் கடும் வெய்யிலில் போராடிவரும் எம்மை காணியின் உரிமையாளர் ஏன் இதுவரையில் சந்திக்க முன்வரவில்லை என்றே தெரியவில்லை” என பன்னங்கண்டி மக்கள் தமது ஆதங்கத்தினைத் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற வந்துள்ள எங்களுக்கு இந்தக் காணிகளின் உறுதிப்பத்திரங்களை காணியின் உரிமையாளர் தரவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (சனிக்கிழமை) 32ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில்,
“இந்த நிலத்தில் 20 வருடங்களுக்கு மேல் வசித்து விட்டோம். காணியின் உரிமையாளர் எமது கஸ்ரத்தினைப் புரிந்து கொண்டு இந்தக்காணிகளை எமக்கு வழங்கி வைக்கவேண்டும். நாம் இந்தக்காணிகளின் பெறுமதியைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம். இதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் காணி உரிமையாளரிடம் இருந்து எமக்கான சாதகமான பதிலைப் பெற்றுத்தரவேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg