Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘சுவசக்தி’ கடன்களை வழங்கும் இலங்கை வங்கி

In வணிகம்
Published: 13:28 GMT, Apr 22, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Surenth
BOC

10 மில்­லியன் வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு அமைய இலங்கை வங்கி அதன் கிளை வலையமைப்பிற்கு ஊடாக ‘சுவசக்தி’ கடன்களை வழங்கும் சேவையை அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இலங்கை வங்கியின் தலைவர் றொனால்ட் சி.பெரேராவின் அனுசரணையுடன் பொது முகாமையாளர் டி.எம் குண்சேகர், பிரதிப் பொது முகாமையாளர் சி.அமரசிங்க மற்றும் கூட்டாண்மை உறுப்பினர்கள், நிறைவேற்று முகாமைத்துவ உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் வங்கியின் கிளைகளுக்கு ஊடாக ‘சுவசக்தி’ கடன்களை வழங்கும் திட்டம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு தகுதியுள்ள பல இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அன்றைய தினம் நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்­திய வங்கி, தேசிய கொள்­கைகள், பொருளாதார விவகார அமைச்சுடன் இணைந்து நாட்டில் தொழில் முயற்சிகளையும் வேலைவாய்ப்புக்களையும் முன்னின்று செய்வது என்ற குறிக்கோளுடன் ‘சுவசக்தி’ கடன் திட்டத்தை வடிவமைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg