Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கிவரும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை

In இலங்கை
Published: 13:22 GMT, Apr 22, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Ravivarman

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையானது சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளின்றி நீண்டகாலமாக இயங்கி வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள மின்தூக்கி பழுதடைந்த நிலையிலுள்ளதால் கீழ் மாடியிலிருந்து மேல் மாடிக்கு நோயாளர்களைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்கம், கிரிவன் எலிய, குடா மஸ்கெலியா இவ்வாறான பகுதிகளில் சுமார், 3 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இப்பகுதி மக்கள் தமது வைத்தியத் தேவைகளுக்காக மேற்படி வைத்தியசாலையினையே நாடி வருகின்றனர்.

குறிப்பாக இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையினால் பொதுமக்கள் தமது சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

DSC00000 (15) DSC00000 (10) DSC00000 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg