Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நல்லாட்சி தொடர்ந்தால் நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த முடியும்: நவீன் திசாநாயக்க

In இலங்கை
Published: 14:13 GMT, Apr 22, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Ravivarman
navin-dissanyake

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறினார்.

கொத்மலே, குடாஓய பிரதேசத்தில் இன்றையதினம் (சனிக்கிழமை) விவசாய உபகரணங்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக்குவதற்கு அரசாங்கத்தினால் வெற்றிகரமான வேலைத் திட்டங்கள் பல முன்னெடுக்கப்படுகின்றன. விசேடமாக விவசாயத்துறையினை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதியின் தலைமையில் பல திட்டங்கள் உள்ளன.

இவற்றில் பல தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெருந்தோட்டத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு செயற்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. தற்போது தேயிலையின் விலை சிறந்த மட்டத்தில் காணப்படுவதால் அதில் அதிக கவனஞ்செலுத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது” என அமைச்சர் நவீன் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg