Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போன பிள்ளை குறித்து எந்த தகவலுமில்லை: தாயொருவர் குமுறல்

In இலங்கை
Updated: 15:56 GMT, Apr 22, 2017 | Published: 15:45 GMT, Apr 22, 2017 |
0 Comments
1291
This post was written by : Ravivarman
amma 62th kili

“இறுதி யுத்தத்தில் காணாமல் போன எனது பெண் பிள்ளையின் தகவல்கள் எதுவுமே தற்போதுவரை எனக்குத் தெரியாது. மனித உரிமைக்குழு உட்பட அனைத்து இடங்களிலும் அறிவித்து விட்டோம்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவான தாயொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 62ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவர் கூறுகையில், “எனது கணவர் யுத்தத்தினால் காயப்பட்டு நடமாட முடியாத நிலையில் இருக்கிறார். இறுதி யுத்தத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது காணாமல்போன எனது பெண் பிள்ளை குறித்த தகவல்கள் இன்றுவரையில் எமக்கு கிடைக்கவில்லை” என கவலையுடன் இவ்வாறு தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg