Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் ஆலயத்திற்குச் சென்ற சிறுவன் குளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

In இலங்கை
Published: 16:22 GMT, Apr 22, 2017 |
0 Comments
1462
This post was written by : Ravivarman
vavu chi

கனகராயன்குளம் – குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தனது நண்பர்களுடன் அணைக்கட்டு வழியாக நடந்து செல்லும் போது குளத்தில் சறுக்கி வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்று வரும் குறிசுட்டகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் கவிப்பிரியன் (வயது 10) என்ற சிறுவனே இன்றையதினம் (சனிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவன் குளத்தில் வீழ்ந்த தகவலை அவனுடன் சென்ற சக நண்பர்களான சிறுவர்கள் கிராமத்திற்கு வந்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கிராமத்தவர்கள் குளத்திற்கு சென்று சிறுவனை மீட்டபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg