Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளில் 50 வீதமானவை உணவகங்களுக்குரியவை!

In இலங்கை
Published: 17:17 GMT, Apr 22, 2017 |
0 Comments
1449
icon_com
This post was written by : Ravivarman
Food-Wastage-Bin

கொழும்பு நகரில் குவியும் குப்பைகளில், 50 வீதமானவை சிற்றூண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படுபவை என சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்பு நகரில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே அதிகமாக காணப்படுகின்றது. இருப்பினும், இவை தவறான நடவடிக்கையினால் நிகழ்பவையல்ல. இவை வழமையான செயற்பாடுகளாகும்.

எனினும் அவற்றினை அகற்றும் நடவடிக்கைகளில் வேறுபுதிய செயற்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் சிற்றூண்டிச் சாலைகளில் வெளியேறும் கழிவுகளை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க முடியும்” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg