Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர். (4ஆம் இணைப்பு)

In உலகம்
Published: 03:44 GMT, Apr 23, 2017 |
0 Comments
1310
icon_com
This post was written by : Anojkiyan

விறுவிறுப்பாக நடைபெற்ற பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில்    எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மிதமான வலதுசாரியான  ஈமானுவல் மேக்ரோன் 23.7% வாக்குகளையும்,   அதிதீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் 21.7%  வாக்குகளையும் பெற்று முதற் சுற்றில் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள் இருவரும் எதிர்வரும் மேமாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க உள்ளனர்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் (3ஆம் இணைப்பு)

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிவரை 28.54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான முதற்கட்ட வாக்குபதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இன்றைய மொத்த வாக்குப்பதிவு, 50 சதவீதத்தை தொடலாம் என நம்பப்படுகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 28.29 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு ஆரம்பமாகியது (2ஆம் இணைப்பு)

உலக நாடுகளின் இன்றைய பார்வைக்குள் கழுகு பார்வையாக தென்பட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது.

வாக்குப்பதிவுக்காக பிரான்ஸில் முக்கிய இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று நடைபெறுவது முதற்கட்ட வாக்குப்பதிவாகும். வாக்குப்பதிவு முடிந்ததும் மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதில் 50 சதவீத வாக்குகளை பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார்.

அதேவேளை யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் மே 7ஆம் திகதி, 2ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற 2 பேர் மட்டும் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐ.எஸ். தீவரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

எனவே தேர்தலை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தால், அங்கு பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளும், 7,000 ஆயிரம் இராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

2 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் இன்று தொடக்கம் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை நடைபெறும் தேர்தலில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென், பிராங்கோயிஸ் ஃபிலான், ஜீன் மெலன் சோன், பெனுவா ஹமூன் உள்ளிட்ட 11 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதலே பிரான்சில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் உலக நாடுகளின் பார்வையில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

அத்தோடு, ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அங்கு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg