Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலெப்போ பேரூந்து தாக்குதலுக்கு ஜபாத் அல்-நுஷ்ரா தீவிரவாத அமைப்பே காரணம்: சிரிய ஜனாதிபதி

In உலகம்
Updated: 04:58 GMT, Apr 23, 2017 | Published: 04:18 GMT, Apr 23, 2017 |
0 Comments
1270
This post was written by : Anojkiyan

அலெப்போ நகரில் நடத்தப்பட்ட பேரூந்து மீதான தாக்குதலுக்கு, அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் துணை அமைப்பான ஜபாத் அல் நுஷ்ரா அமைப்பே காரணம் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிரியாவின் உக்கிர மோதல் இடம்பெற்றுவரும் அலெப்போ நகரிலிருந்து, கடந்த 16ஆம் திகதி, அங்குள்ள மக்களை பாதுகாப்பாக பேருந்துகள் ஊடாக வெளியேற்றிக்கொண்டிருந்த போது, பேருந்துகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 68 குழந்தைகள் உட்பட 126 பேர் உயிரிழந்தனர்.

இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில், ஜபாத் அல் நுஷ்ரா அமைப்பே இத்தாக்குதலை அரங்கேற்றியதாக சிரிய ஜனாதிபதி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“அல் கொய்தாவின் முன்னாள் துணை அமைப்பான ஜபாத் அல் நுஷ்ரா, ஆரம்பம் முதலே இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது படே அல் ஷாம் ப்ரெண்ட் என்ற அமைப்பு அல் கொய்தாவுடன் தனது இணைப்பை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளும் துருக்கி வழியாகவே கிடைக்கின்றன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg