Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இணையங்களில் ஊடுருவிய ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை

In
Published: 04:44 GMT, Apr 23, 2017 |
0 Comments
1381
icon_com
This post was written by : Anojkiyan

அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்களில் ஊடுருவி கடன் அட்டை மூலம் பண மோசடி செய்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மேற்கு வொஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி ரிச்சர்ட் ஜோன்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான வலேரி செலெஸ்னேவ்வின் மகனான 32 வயதான ரோமன் செலெஸ்னேவ், கடந்த 2009-2013 ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்காவில் உள்ள சுமார் 500 பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையதளங்களுக்குள் ஊடுருவி, வாடிக்கையாளர்களின் இரகசிய குறியீடுகள் தொடர்பான விபரங்களை சூறையாடி போலி கடனட்டைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்றுள்ளார்.

இவ்வாறு போலி கடனட்டைகளை தயாரித்த மோசடியாளர்கள் மேற்படி நிறுவனங்களுக்கு சொந்தமான இணையதளங்களுக்குள் ஊடுருவி, சுமார் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளனர்.

இதுதொடர்பான, புகார்களையடுத்து விசாரணை நடத்திய அமெரிக்க இரகசிய பொலிஸார், கடந்த 2014ஆம் ஆண்டு மாலைத்தீவில் வைத்து ரோமன் செலெஸ்னேவ்வை கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தினர்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட செலெஸ்னேவுக்கு எதிராக வொஷிங்டன், நெவேடா மற்றும் ஜோர்ஜியா நீதிமன்றங்களில் மோசடி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் வொஷிங்டன் நீதிமன்றத்தில் மட்டுமே இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நெவேடா மற்றும் ஜோர்ஜியா நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் இரு மோசடி வழக்குகளிலும் ரோமன் செலெஸ்னேவுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg