Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக விவசாயிகளை சந்தித்தார் முதல்வர் பழனிச்சாமி

In இந்தியா
Updated: 07:07 GMT, Apr 23, 2017 | Published: 04:34 GMT, Apr 23, 2017 |
0 Comments
1246
This post was written by : Shailu
01

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை அம்மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தவுள்ளதாக உறுதி அளித்துள்ளார்.

அத்தோடு, வங்கிக் கடனை இரத்து செய்யவும் பிரதமரிடம் வலியுறுத்துவதாக உறுதி அளித்த முதலமைச்சர், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதி நீர் இணைப்பு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து போராட்டத்தை  கைவிடுமாறு கோரிக்கை விடுத்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg