Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு விழாவை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு

In இலங்கை
Updated: 05:02 GMT, Apr 23, 2017 | Published: 04:42 GMT, Apr 23, 2017 |
0 Comments
1574
icon_com
This post was written by : Ravivarman
uurilai

‘மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள்’ என்னும் தொனிப்பொருளில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவினை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்துவதற்கு உயிரிழை என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்றையதினம் (சனிக்கிழமை) உயிரிழை அமைப்பினரால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும்  தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திகதிகளில் கிளிநொச்சியிலும், ஓகஸ்ட் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் மட்டக்களப்பிலும் இவ்விளையாட்டு போட்டியை நடத்த தீர்மானித்துள்ளோம். சமூகத்தில் ஒரு பெரும் அங்கமாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மாவட்டம் தோறும் சென்று எமது சக மாற்றுத் திறனாளிகளை இனங்கண்டு மைதானத்திற்கு அழைத்து வரவுள்ளோம். இவர்களது நிலை குறித்து எமது சமூகத்திடம் முதலில் சொல்வதற்கு இந்த விளையாட்டுப்போட்டிகள் எமக்கு உதவுகின்றன” என உயிரிழை அமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg