Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டுகஸ்தொட்ட குப்பைமேடும் சரிந்து விழும் அபாயம்! – மக்களுக்கு எச்சரிக்கை

In இலங்கை
Updated: 04:45 GMT, Apr 23, 2017 | Published: 04:45 GMT, Apr 23, 2017 |
0 Comments
1557
This post was written by : Varshini

கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தின் மீட்புப் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் உள்ள கொனாகொட – தேக்கவத்தையில் உள்ள பாரிய குப்பைமேடும் சரியக்கூடிய அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பைமேடு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதாக தெரிவித்துள்ள மத்திய மாகாண சபையின் உறுப்பினரான சட்டத்தரணி அசங்க திலகவர்தன, விரைவில் அது சரிந்து மகாவலி கங்கையில் விழக்கூடும் என்றும், அதன் அருகிலுள்ள கண்டி மாநகர சபையின் ஊழியர்களின் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய மாகாண ஆளுநருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ள அசங்க திலகவர்தன, தொடர்ந்தும் அசமந்த போக்கில் செயற்பட்டால் மீதொட்டமுல்ல அனர்த்தத்தைப் போன்று மீண்டுமொரு அனர்த்தம் ஏற்படுவதை தடுக்க முடியாதென எச்சரித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg