Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிட்னி வனவிலங்கு பூங்காவிலுள்ள விலங்குகளை பார்த்து இரசித்தார் மைக் பென்ஸ்

In
Published: 04:52 GMT, Apr 23, 2017 |
0 Comments
1288
icon_com
This post was written by : Anojkiyan

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவரது குடும்பத்தாருடன், அவுஸ்ரேலியா சிட்னியில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்வையிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ள அவர், இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அவரது மனைவி கரென், மகள்மாரான சார்லட் மற்றும் அவ்டரீ ஆகியோருடன் டோரங்கா பூங்காவிற்குச் சென்று, உள்ளூர் விலங்குகளை கண்டு மகிழ்ந்துள்ளார்.

ஆசிய நாடுகளுக்கான 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பென்ஸ், தென்கொரியா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை முடித்துக் கொண்டு இறுதியாக அவுஸ்ரேலியா சென்றுள்ளார்.

தென்சீனக் கடல் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் கொரிய தீபகற்ப அச்சுறுத்தல்கள் என்பன விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையிலேயே, அவர் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் இராஜதந்திரியாக விளங்கும் மைக் பென்ஸ், நேற்றைய தினம் அவுஸ்திரேலிய பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg