Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: வொஷிங்டன் தூதரகத்தில் வாக்களித்த பிரான்ஸ் வாக்காளர்கள்

In ஐரோப்பா
Published: 05:15 GMT, Apr 23, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Anojkiyan

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, வொஷிங்டனில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர்

பிரான்ஸிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பிரான்ஸ் மக்கள், தமது நாட்டு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் (சனிக்கிழமை) இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.

பிரான்ஸில் இன்றைய தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், வெளிநாடுகளில் வாழும் பிரான்ஸ் மக்கள் பல்வேறு நாடுகளிலும் உள்ள தூதரகங்களின் ஊடாக வாக்களித்திருந்தனர்.

பூகோளஅரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் ஒரு நாடாக பிரான்ஸ்  விளங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. சபை, நேட்டோ அமைப்பு, வீட்டோ அதிகாரம் என பல்வேறு கோணங்களில் செல்வாக்கு செலுத்தும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதித் தேர்தல், உலக நாடுகளினால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg