Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக விரோதச் செயல்களை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு சமுதாய பொலிஸ் பிரிவு வேண்டுகோள்!

In இலங்கை
Updated: 05:41 GMT, Apr 23, 2017 | Published: 05:35 GMT, Apr 23, 2017 |
0 Comments
1226
This post was written by : Ravivarman

சமூக விரோதச் செயல்களை ஒழிக்க சகலரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சமுதாய பொலிஸ் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன்,  துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்துள்ளது.

இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் நேற்றையதினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப் பிரசுரத்தில்,

“பழம்பெரும் வரலாற்றையும் சிறப்பான கலை, கலாசார, பண்பாட்டு மரபுவழி விதிமுறைகளையும் தன்னகத்தே கொண்ட கொக்கட்டிச்சோலையில் தற்போது சமூக விரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன. இவை இப்பிரதேசத்தின் பெருமைகளைச் சீர்குலைத்து வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள மது பாவனை, கள்ளச்சாராய உற்பத்தியும் பாவனையும், இளவயதுத் திருமணம், குடும்ப வன்முறைகள், வீண் சச்சரவுகள் என்பனவற்றால் பல குடும்பங்களில் சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, வறிய மக்கள் சில நுண்கடன் வழங்கும் நிறுவனங்களினால் கவரப்பட்டு கடன் பெற்று பின்னர் அவற்றை மீளச் செலுத்த முடியாது உளத்தாக்கத்தோடு அலைகிறார்கள். இவற்றைத் தடுப்பதில் எல்லோரும் அக்கறை காட்ட வேண்டும்.

பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வியில் அக்கறையை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் தொலைக்காட்சி, இசைக்கருவி மற்றும் வானொலிகளை பயன்படுத்த வேண்டும்,

தமிழர் பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகளை அணிவதுடன், மது பாவனையுடன் ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கருகில் இடையூறு செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவுதல், புதிய நபர்கள் கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கும் போது அதுபற்றி கிராம சேவையாளருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல விடயங்களில் மக்கள் அக்கறை காட்ட வேண்டும்” என குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg