Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மூன்றாவது வெற்றிக்காக களமிறங்கும் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள்

In கிாிக்கட்
Updated: 08:11 GMT, Apr 23, 2017 | Published: 07:42 GMT, Apr 23, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Surenth
Kings-XI-Punjab-vs-Gujarat-Lions

ஐ.பி.எல். தொடரின் 26ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன.

ரெய்னா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணி இன்று மாலை 4.00 மணிக்கு ராஜ்கோட்டில் மோத உள்ளது.

பஞ்சாப் அணி இரண்டு வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் சந்தித்து நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது. முதலாவது போட்டியில் புனேயையும், இரண்டாவது போட்டியில் பெங்களூரையும் வெற்றி கொண்டது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்க மூன்றாவது வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, குஜராத் லயன்ஸ் அணி இரண்டு வெற்றிகள், நான்கு தோல்விகளுடன் நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது. கடந்த போட்டிகளில் புனே மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, பெங்களூர் ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவி உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை குஜராத் அணி பதிவு செய்யும் என நம்பப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg