Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது: செங்கோட்டையன்

In இந்தியா
Updated: 09:43 GMT, Apr 23, 2017 | Published: 09:13 GMT, Apr 23, 2017 |
0 Comments
1531
This post was written by : Shailu

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினையை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  “பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி பிரச்சினையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்வது வேதனையளிக்கின்றது

விவசாயிகளின் நியாயமான இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும்.

எனவே இதனை வலியுறுத்தி எதிர்வம் 25ஆம் திகதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்காது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg