Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியில் வெள்ளைவான் தொல்லைகள் இல்லை: திகாம்பரம்

In இலங்கை
Updated: 09:33 GMT, Apr 23, 2017 | Published: 08:52 GMT, Apr 23, 2017 |
0 Comments
1175
This post was written by : Ravivarman
thigaa

கடந்த அரசாங்கத்தில் இருந்ததைப் போன்று வெள்ளைவான் தொல்லைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் இல்லை என மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பத்தனை போகாவத்தை தோட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 60 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கறுப்புவான், வெள்ளைவான் என கடந்த அரசாங்கம் மக்களுக்குப் பல தொல்லைகளைத் தந்தது. ஆனால் இன்று மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்.

நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ள நிலையிலும் இந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவை அங்கீகாரத்துடன் கிராமப்பகுதிகளுக்கு மேலும் பல அபிவிருத்தி பணிகளை செய்ய வாய்ப்பை பெறுவேன்.

அடுத்த வருடம் நாட்டின் திட்டமிட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளையும் செய்து முடிப்பதை இலக்காகக் கொண்டு இந்த அரசாங்கம் செயற்படுகின்றது” என அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg