Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

27ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன

In கிாிக்கட்
Updated: 09:55 GMT, Apr 23, 2017 | Published: 09:23 GMT, Apr 23, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Surenth
KKR-vs-RCB

கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன.

ஐ.பி.எல். தொடரின் 27ஆவது போட்டி, 19ஆவது நாளான இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு வெற்றிகளையும் நான்கு தோல்விகளையும் கண்டு, நான்கு புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐ.பி.எல். புள்ளி தரப்படுத்தலில் முன்னேற்றம் காண்பதற்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொல்கத்தா அணி நான்கு வெற்றிகளுடனும், இரண்டு தோல்விகளுடனும் எட்டு புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூர் அணியுடனான இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுக்கொள்ள கொல்கத்தா அணி போராடும் என நம்பப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg