Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்த வருடம் வெளியாகிறது விஸ்வரூபம் இரண்டாம் பாகம்

In சினிமா
Updated: 10:08 GMT, Apr 23, 2017 | Published: 09:52 GMT, Apr 23, 2017 |
0 Comments
1153
This post was written by : Vithushagan

கமல்ஹாசனின் நடிப்பு,  இயக்கம், தயாரிப்பு என  பிரமாண்டமாக  உருவான   ‘விஸ்வரூபம்-2’ திரைப்படம் இந்த வருடத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்’. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில நாட்களிலேயே இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கமலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு கமலும் விபத்தில் சிக்கி, நடக்க முடியாமல் கஷ்டப்படவே, ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதால், ‘விஸ்வரூபம்-2’ படத்தை வெளியிட கமல் முயற்சி எடுத்து வருகிறார். தயாரிப்பாளருடன் ஒருவழியாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தி படத்தின் வேலைகளை மறுபடியும் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகளையும், பிற பணிகளையும் தொடங்கியிருப்பதாக கமலுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, எதிர்வரும் ஒக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg