Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவியிலிருந்த இந்தியர் பதவி நீக்கம்!

In இந்தியா
Updated: 17:33 GMT, Apr 23, 2017 | Published: 10:39 GMT, Apr 23, 2017 |
0 Comments
1286
This post was written by : Shailu
Vivek Murthy

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த அமெரிக்க வாழ் இந்திய பிரஜையான விவேக் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சுகாதார மற்றும் மனித நேய சேவைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் மருத்துவ சேவைப் படையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விவேக் மூர்த்தி விடுவிக்கப்பட்டாலும், அந்தப் படையில் அவர் தொடர்ந்து அங்கம் வகிப்பார் என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கௌரவம் மிக்க அமெரிக்க மருத்துவ சேவைப் படைத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் விவேக் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg