Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்கிறார் யூனிஸ்கான்

In கிாிக்கட்
Updated: 13:30 GMT, Apr 23, 2017 | Published: 10:47 GMT, Apr 23, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Surenth
Yunus Khan

அணிக்கு தேவை ஏற்பட்டு தன்னை தொடர்ச்சியாக விளையாடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டால் தனது ஓய்வு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் யூனிஸ்கான் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் போட்டியுடன் தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ள அவர், இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

தன்னால் இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாட முடியும் எனவும் இரசிகர்கள் தன் மீது வெறுப்பு கொள்ளும் முன்னர் தான் ஓய்வு பெறுவது குறித்து தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தான் ஓய்வு பெறுவது குறித்து எடுத்துள்ள முடிவு சிறந்த முடிவு என்றும் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை சரியான நேரத்தில் தான் வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அணிக்கு தேவை ஏற்பட்டால் தொடர்ச்சியாக விளையாட தயாராக இருப்பதாகவும் இதுவரையில் தன்னால் முடிந்த வரை அணிக்காக விளையாடி உள்ளதாகவும் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg