Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜப்பான் மீது தாக்குதல் நடத்த தயாராகிறதா வட கொரியா?

In
Updated: 17:34 GMT, Apr 23, 2017 | Published: 10:50 GMT, Apr 23, 2017 |
0 Comments
4066
icon_com
This post was written by : Anojkiyan
North-Korea-missile-663759

உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள வட கொரியா, எதிர்ப்பு நாடுகளில் ஒன்றான ஜப்பான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மக்கள் இராணுவம் அமைக்கப்பட்ட 85வது ஆண்டு தினத்தை எதிர்வரும் 25ஆம் கொண்டாடும் வட கொரியா, இத்தினத்தன்று தனது தாக்குதலை தொடுக்கும் என இராணுவ வல்லுனர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுமாயின் அது மூன்றாம் உலகப்போருக்கான முதற்படியாக அமையுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாது அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை, அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டு சோதனை என உலக நாடுகளை அதிர்ச்சி வலையில் வீழ்த்தி வரும் வடகொரியாவின் செயற்பாடு, மூன்றாம் உலகப்போருக்கு தாம் தயார் என்பதை காட்டுவதாகவே அமைந்துள்ளதென இராணுவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் வட கொரியாவிற்கு அருகே கொரிய தீபகற்பத்துக்கு உட்பட்ட கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹோர்ல் வின்சன் போர்க் கப்பல் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சமிடரே, ஆஷிகரா ஆகிய போர் கப்பல்களில் இருந்தபடி இருநாட்டு வீரர்களும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg